நிலை 5

வயது வரம்பு:

குறைந்த பட்சம் 8 வயது.


தகுதி:

அ த க நிலை 4 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே வாக்கியங்கள் படித்து புரிந்து கொள்ளுதல்; வாக்கியங்கள் எழுதுதல், இலக்கண அறிவு (ஒருமை, பன்மை, வினைச்சொல், பெயர்ச்சொல், சுட்டுப்பெயர், கால நிலைகள், வினை வகைகள், மற்றும் எட்டு வகையான வேற்றுமை உருபுகள் அறிதல்) போன்ற திறன்கள் பெற்றிருத்தல்.


நோக்கம்:

உரைநடை வாசித்தல், புரிந்து கொள்ளுதல்.

அடிப்படை தமிழிலக்கணத்தின் புரிதல்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி மாற்றம் செய்தல்.


மொழித்திறன்:

வாக்கியங்களைத் தெளிந்த உச்சரிப்போடு பிழையின்றி படித்தல், புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.

மொழி மாற்றம் செய்தல்; பண்பாடு மற்றும் இலக்கியம் சார்ந்த பாடங்கள் படித்து தெளிவுபட கருத்துக்களை வெளிப்படுத்தல்.

வாக்கியங்கள், கருத்துக்கள், வார்த்தைகள் மற்றும் இலக்கணத்தை ஆங்கில மொழியோடு ஒப்பிட்டுப் பயிலுதல்.

திருக்குறளின் தொன்மை அறிந்து, தெளிவுபடப் படித்து விளக்கம் சொல்லுதல்.