எம்மைப்பற்றி 

KURINCHI THAMIZH SCHOOL is organized exclusively for purposes of providing the Classical Thamizh (or Tamil) language education, Thamizh language enrichment activities and other closely related allied purposes. The Kurinchi Thamizh School is registered in the state of New Jersey on 18th Feb 2020.

The Organization is a nonprofit organization incorporated and operated exclusively for charitable, educational and cultural purposes, including, for such purposes for making of distributions to organizations that qualify as exempt organizations described under section 501 (c) (3) of United States Internal Revenue Code, or corresponding section of any future federal tax code. 

குறிஞ்சி தமிழ்ப் பள்ளியின் முதன்மை  நோக்கம் செம்மொழியாம் தமிழ் மொழியை கற்பித்தலும், தமிழ் மொழி தொடர்புடைய ஏனைய வளர்ச்சி பணிகளை செயல் படுத்துதலுமே ஆகும். குறிஞ்சி தமிழ் பள்ளி நியூ செர்சி மாநிலத்தில் 2020 பிப்ரவரி 18 அன்று பதிவு செய்யப்பட்டது.

இத் தமிழ்ப்பள்ளி இலாப(வணிக) நோக்கற்ற அமைப்பாகும். கல்வி பணிகளுக்கு தொண்டாற்றுதல், மற்றும் மரபு வழி கலை கலாச்சார பேணல் நோக்கங்களுக்காக ஒருங்கிணைந்து செயல்படுதல்  ஆகியவற்றுக்காக இயக்கப்படுகிறது. 

Kurinchi Thamizh School is affiliated with the American Tamil Academy, and use their structured methodology and proven teaching materials. American Tamil Academy’s mission is to inspire and educate the K-12 students and adults by immersing them into the richness of classical Tamil language and thus make them earn language credits. 


Kurinchi Thamizh School is managed by experienced, and enthusiastic parent volunteers as teachers and other supportive staffs. 

குறிஞ்சி தமிழ்ப் பள்ளி அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆர்வமுள்ள பெற்றோர், தன்னார்வலர்கள் துணையுடன் நிர்வகிக்கப்படுகிறது. 


நிர்வாகக்குழு

Trustee & Treasurer

பிரமிளா கன்னியப்பன் 

எனது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை. தற்பொழுது வசிப்பது Skillman, New Jersey. மருந்தியல் துறையில் பட்டம் பெற்று ஒரு ஆய்வு நிறுவனத்தில் தர உத்திரவாதப்  பிரிவில் பணியாற்றுகிறேன். தமிழ் மொழியின் மீது உள்ள ஆர்வத்தினால் இங்குள்ள தமிழ்ப்பள்ளி ஒன்றில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆசிரியையாக கற்பித்து வருகிறேன்.

நம் செம்மொழியாம் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் சிறு நல்முயற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். 

 வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்!!!

Trustee

சுமதி குமாரவேல்  

தஞ்சையில் பிறந்து, பொறியியல் பட்டம் பெற்ற எனக்கு தமிழ் பற்று இயற்கையான உணர்வு. “தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க என் குடும்பத்தை பேணும் கடமையை போலவே தமிழை பேணுவதையும் கடமையாக கருதுகின்றேன். 

அமெரிக்காவில் இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு தமிழை கற்பிக்கும் நல் முயற்சியில் “குறிஞ்சி தமிழ்ப் பள்ளி”  நிறுவப்படுதல் இன்றியமையாதது என கருதுகின்றேன். குறிஞ்சி தமிழ்ப் பள்ளி “ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி பெருவாழ்வு வாழும்” என தமிழ் மீது உள்ள நம்பிக்கையால் வாழ்த்துகின்றேன்.

தமிழ் வளர்ப்போம்! அறம் வளர்ப்போம்!! 

தலைமுறை வளர்ப்போம்!!!

Trustee

சரவணக் குமார் பெருமாள் 

சென்னையில் பிறந்து வளர்ந்த நான், இளங்கலை கட்டிடக் கலையும், முதுகலை தொழிற் நிர்வாகக் கல்வியும் பயின்றுள்ளேன். கலை இலக்கிய அறிவியல் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவன். தமிழ் மொழி மீதுள்ள பற்றினால் தொடர்ந்து அதன்  வளத்தினையும் தொன்மையையும் கற்று மற்றுவர்களுக்கும் பரப்பி வருபவன். அதன் தொடர்ச்சியாக நியூசெர்சியின் தமிழ்ப்பள்ளி ஒன்றில் கடந்த 2017 முதல்  தமிழ் கற்றுத் தரும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.  

அமெரிக்க வாழ் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், உங்களுடன் இணைந்து நம் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து  செல்வோம்.

வாழ்க தமிழ்!! வெல்க தமிழ்!!!

Arivudai Nambi Ramachandran

(President)

Raja Elangovan

(Vice President)

Amudha Saravanakumar

(Event Co-ordinator)